வெண்டிலேட்டர் செயலிழப்பால் பெண் மரணம்.., தமிழக அரசு மருத்துவமனையில் அவலம்
திருவாரூர் அரசு மருத்துவமனையில், தொடர் மின்தடையால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சையில் பெண்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் அமராவதி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக சேர்க்கப்பட்டார்.
அப்போது இவருக்கு, சுவாசிப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெண்டிலேட்டர் மூலமாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
மின்தடை
இந்நிலையில் நேற்று, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வெண்டிலேட்டர் இயங்காததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அமராவதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெண்ணின் உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, மின்தடை ஏற்பட தாங்கள் காரணம் இல்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், 10 நிமிடங்களில் மின்தடை சீராகிவிட்டதாகவும் மின்வாரியம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |