பட்டப்பகலில் துணை ராணுவத்தால் சீரழிக்கப்பட்டேன்... பெண் ஒருவரின் நடுங்கவைக்கும் வாக்குமூலம்
சூடானில் போர் பதற்றம் மிகுந்த டார்ஃபர் பகுதியில் துணை ராணுவத்தின் பிடியில் சிக்கி சீரழிந்ததாக பெண்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகக் கொடூரமானவர்கள் அவர்கள்
இன ரீதியாகவும் அவர்கள் தம்மை துன்புறுத்தியதாகவும் Kolthom என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். மிகக் கொடூரமானவர்கள் அவர்கள் என குறிப்பிட்டுள்ள Kolthom, சமையலுக்கு விறகு சேகரிக்க சென்ற தம்மை அவர்கள் கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
@getty
கருப்பின ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர் 40 வயது கடந்த Kolthom. ஆனால் அவரை சீரழித்த துணை ராணுவத்தினர் அரபு வம்சாவளியை சேர்ந்தவர்கள். டார்ஃபர் பகுதியில் சண்டையின் பின்னணியில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் துணை ராணுவத்தினர்.
El Geneina பகுதியில் குடியிருந்து வந்த Kolthom, தற்போது தமது உடல் நலம் குன்றிய கணவன் மற்றும் பிள்ளைகளுடன் இடம்பெயர்ந்துள்ளார். அரபு மக்களுக்கான பகுதியில் கருப்பின ஆப்பிரிக்க மக்களுக்கு என்ன வேலை என மிரட்டியே அவர்கள் துன்புறுத்தியதாக Kolthom தெரிவித்துள்ளார்.
இதே நிலை தான் 24 வயதான Ibtissam என்பவருக்கும் நேர்ந்துள்ளது. தமது உறவினர் ஒருவரை சந்திக்க செல்லும் வழியில் துணை ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியதாகவும்,
57 பெண்கள் மற்றும் சிறார்கள்
பின்னர் மூன்று துணை ராணுவத்தினர் வாகனம் ஒன்றில் அவரை அழைத்து சென்று, அருகாமையில் உள்ள குடியிருப்புக்குள் வைத்து கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியதாக தெரிவித்துள்ளார்.
@getty
அந்த மூவரும் பல முறை துன்புறுத்திய பின்னர், இரவில் சாலை ஓரத்தில் தனியாக விட்டுவிட்டு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்தை அடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும், ஆனால் பின்னர் அந்த முடிவை கைவிட்டதாகவும் Ibtissam தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவிக்கையில், சூடானில் போர் தொடங்கிய பின்னர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் 21 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 57 பெண்கள் மற்றும் சிறார்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |