உலகில் அதிகரிக்கும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை: ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 73 கோடியாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தட்டுப்பாடு
உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தி விட்டு சென்ற நிலையில், மாதக்கணக்கிலான ஊரடங்கு நடவடிக்கைகள் பல தொழில்களை முடக்கி விட்டது.
இதனால் பலர் தங்களது வேலைகளை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை உலக உணவு தானிய ஏற்றுமதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, பல்வேறு நாடுகளில் உணவு தட்டுப்பாட்டை தலைவிரித்து ஆட வைத்து விட்டது.
UN
உக்ரைன் ரஷ்யா போரினால் ஏற்பட்ட தட்டுப்பாடுகள் காரணமாக பல நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரேஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டு விட்டது.
பசியால் வாடும் 73 கோடி பேர்
இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் பசியால் வாடுவோரின் தற்போதைய எண்ணிக்கை 73 கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது.
இது கடந்த 2019ம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை தற்போது 12 கோடி அதிகரித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 240 கோடி பேர் தினமும் பசியால் உணவிற்காக போராடி வருவதாக ஐக்கிய நாடுகள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆசியா, லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், கரீபியன், மேற்கு ஆசியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புக்கு கொரோனா மற்றும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முக்கிய காரணம் என ஐ.நா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |