உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண்: ஹாலிவுட்டிலும் கலக்கியிருக்கிறாராம்
உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பெண்ணைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண்
உலகில் உயிர் வாழ்பவர்களிலேயே மிகவும் சிறிய உருவம் கொண்டவர் ஜோதி (Jyoti Amge, 30). இந்தியாவின் நாக்பூரில் பிறந்த ஜோதிக்கு 30 வயதாகிறது என்றால் நம்ப முடியவில்லை.
கியூட்டான குழந்தை போல காட்சியளிக்கும் ஜோதியின் உயரம், 62.8 சென்றிமீற்றர் மட்டுமே. சிறுவயதில், achondroplasia என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டதால், ஐந்து வயதுக்கு மேல் அவரது உடல் வளர்ச்சி அடையவில்லை.
ஹாலிவுட்டிலும் கலக்கியிருக்கிறாராம்
ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, சும்மா ஹாலிவுட் வரை சென்று கலக்கியிருக்கிறார் ஜோதி.
அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்த அவரது நடிப்பு பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது.
அது மட்டுமல்ல, 2009ஆம் ஆண்டில், உலகில் வாழும் சிறிய உருவம் கொண்ட பதின்மவயதுப் பெண் என கிரீடம் சூட்டப்பட்ட ஜோதி, பின்னர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.
எனக்கு தொலைக்காட்சியில் நடிக்கப் பிடித்திருக்கிறது என்று கூறும் ஜோதி, அதற்கு வித்தியாசமான ஒரு காரணத்தைக் கூறுகிறார்.
தொலைக்காட்சியில் நடிக்கும்போது, மக்கள் என்னைக் கண்டு வியந்து பாராட்டுகிறார்கள்.
ஆனால், நேரில் பார்க்கும்போது, 30 வயது இளம்பெண்ணான என்னை, ஒரு சிறு குழந்தை போல தூக்கிவைத்துக்கொள்வதும், என்னிடம் குழந்தையிடம் கேள்வி கேட்பது போல கேட்பதும் எனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் ஜோதி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |