ஒரு டிக்கெட்டின் விலை ரூ.7 கோடி - உலகின் விலையுர்ந்த கப்பல் பயணம் எப்படி இருக்கும்?
உலகின் விலையுர்ந்த கப்பல் பயணம் 2027 ஆம் ஆண்டில் துவங்க உள்ளது.
உலகின் விலையுர்ந்த கப்பல் பயணம்
ரீஜென்ட் செவன் சீஸ் என்ற நிறுவனம், World of Splendor என்ற பெயரில் உலகின் விலையுயர்ந்த சொகுசு கப்பல் பயணத்தை அறிவித்துள்ளது.
2027 ஆம் ஆண்டில் துவங்க உள்ள இந்த பயணம், 170 நாட்களுக்கு இருக்கும். இதில், பயணிக்கும் பயணிகள் 40 நாடுகளில் உள்ள 71 துறைமுகங்களுக்கு பயணம் செய்வார்கள்.
அதாவது 6 கண்டங்களில், சுமார் 35,668 கடல் மைல்கள்(66,057 கிமீ) பயணம் செய்வார்கள். இந்த பயணம் மியாமியில் தொடங்கி நியூயார்க்கில் முடிவடைகிறது.
இந்த 170 நாள் பயணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ், சிட்னி, சிங்கப்பூர், போன்ற முக்கிய நகரங்களில் இரவு தங்குவார்கள். இந்தியாவில், மும்பை, மங்களூரு, கொச்சி, கோவா என 4 இடங்களில் இந்த கப்பல் நின்று செல்லும்.
இந்த பயணத்தில், 746 பயணிகள் மட்டுமே செல்ல முடியும்.
ரூ.7.3 கோடி டிக்கெட்
இதற்கான டிக்கெட் கட்டணம் ஆரம்ப நிலை வெராண்டா அறைகளுக்கு ரூ.80 லட்சத்தில் தொடங்கி, உயர்நிலை ரீஜண்ட் சூட்டுக்கு ஒரு விருந்தினருக்கு 8.40லட்சம் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.7.3 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், உங்களுக்கு சுற்றி பார்க்க செல்லும் இடங்களுக்கு தனி கார், தனி ஓட்டுநர் வழங்கப்படும். மேலும் நீங்கள் தங்குவதற்கு 4000 சதுரடி உள்ள பிரத்தியேக வசதியுடன் கூடிய சொகுசு அறை வழங்கப்படும்.
இந்த பயணத்தின் போது, 486 இலவச கடற்கரை சுற்றுலாக்கள், 3 பிரத்யேக கடற்கரை விழா நிகழ்வுகள் ஆகியவை இருக்கும்.
மேலும், ஆடம்பர ஹொட்டலில் தங்குவது, பிரீமியம் பானங்கள், சிறப்பு உணவுகள், வேலட் லாண்ட்ரி, வைஃபை 24 மணிநேர இன்-சூட் டைனிங் ஆகியவை இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |