உக்ரைன் போருக்கு எதிராக உணர்ச்சிக்கர கவிதைகள்..பெண் இயக்குநரின் மேல்முறையீட்டை நிராகரித்த ரஷ்ய நீதிமன்றம்
ரஷ்யாவில் நாடக இயக்குநர் யெவ்ஜெனியா பெர்கோவிச்சின் மேல்முறையீட்டினை மாஸ்கோ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாடக இயக்குநர் மற்றும் ஆசிரியர் கைது
ரஷ்யப் பெண்களைப் பற்றிய விருது பெற்ற நாடகம் தொடர்பாக, பெண் நாடக இயக்குநர் யெவ்ஜெனியா பெர்கோவிச் (Yevgeniya Berkovich) மற்றும் நாடக ஆசிரியர் ஸ்வெட்லானா பெட்ரிச்சுக் (Svetlana Petriychuk) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
Alexander NEMENOV/AFP/Scanpix/Leta
மேலும், உக்ரைனில் நடந்த போருக்கு எதிராக உணர்ச்சிகரமான கவிதைகளை எழுதியதாகவும் யெவ்ஜெனியா மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
அதேபோல் அவர்களது நாடகமான ''Finist, the Brave Falcon'' நாடகம் தீவிரமான பெண்ணியத்தை ஊக்குவிக்கும் ஒரு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும், இது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Kommersant/
Anton novoderezhkin
மேல்முறையீடு நிராகரிப்பு
இந்த நிலையில் இருவரின் மேல்முறையீட்டை மாஸ்கோ நீதிமன்றம் நிராகரித்து, அவர்களை விடுவிக்க மறுத்துள்ளது. சூலை ஆரம்பம் வரை அவர்கள் இருவரும் விசாரணைக்கு முந்தைய காவலில் இருப்பார்கள் என்றும் உறுதி செய்துள்ளது.
யெவ்ஜெனியா பெர்கோவிச் மற்றும் ஸ்வெட்லானா பெட்ரிச்சுக் ஆகியோரின் ஆதரவாளர்கள் சிலர், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நீதிமன்றத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தான் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று பெர்கோவிச் கேட்டுக் கொண்டதை நீதிமன்றம் நிராகரித்தது.
SOTA/Telegram