வேலைக்காக Telegram குரூப்பில் இணைந்த இளைஞர்! ரூ.20 லட்சம் இழந்த பரிதாபம்
இந்திய மாநிலம், ஆந்திராவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் வேலைக்காக டெலிகிராம் குரூப்பில் இணைந்து ரூ.20 லட்சத்தை இழந்துள்ளார்.
டெலிகிராம் குரூப்பில் இணைந்த இளைஞர்
ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற இளைஞர் பொறியியல் படிப்பை நிறைவு செய்துள்ளார். இவர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சார்ந்த துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.
அப்போது, தன்னுடைய நண்பர் கிருஷ்ண சைத்தன்யா ரெட்டி என்பவர் பரிந்துரையின் படி ‘Developer Professionals’ என்ற டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொண்டார்.
இந்த குரூப்பில், பலரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சார்ந்த வேலைகளை பகிர்ந்து வந்துள்ளனர்.
ரூ.20 லட்சம் ஒன்லைன் மோசடி
அப்போது, அந்த குரூப்பில் வேலைக்கான தகவல் ஒன்றை பார்த்த ஹர்ஷவர்தன், அதனை அனுப்பியவரை தொடர்பு கொண்டார். அதற்கு அவர், பெங்களூருவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
ஆனால், அந்த வேலைக்கு ஈடாக ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதற்கு ஹர்ஷவர்தன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தவணை முறையில் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.
இதன் பின்னர், தொடர்புடைய நிறுவனத்தை அணுகி பணி நியமன கடிதத்தை கேட்ட போதுதான் ஏமாந்துவிட்டோம் என ஹர்ஷவர்தனுக்கு தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, காவல்நிலையத்தில் ஹர்ஷவர்தன் புகார் கொடுத்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |