21,000 வாக்னர் கூலிப்படையினரை கொன்று குவித்தோம் - மார் தட்டும் ஜெலென்ஸ்கி!
கிழக்கு உக்ரைனில் 21,000 வாக்னர் கூலிப்படையினரை கொன்று வீழ்த்தியதாக ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
வாக்னர் கூலிப்படையினருக்கு பெரும் சேதம்
ரஷ்யாவின் தனியார் இராணுவ படை என கூறப்படும் கூலிப்படை குழுவான Wagner Group பெரும் இழப்பை சந்தித்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
"ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து உக்ரைனில் வாக்னர் கூலிப்படை அதிக உயிரிழப்புகளை சந்தித்தது. கிழக்கு உக்ரைனில் மட்டும், எங்கள் படைகள் 21,000 வாக்னர் வீரர்களைக் கொன்று குவித்தன' என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
AFP/AP
அதுமட்டுமின்றி, 80,000 வாக்னர் படையினர் போரில் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறினார். ஜெலென்ஸ்கி தனது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
உலகமே புடினை கொல்ல விரும்புகிறது
ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸின் கீவ் விஜயத்தை ஒட்டி ஸ்பானிய ஊடகங்களுடனான செய்தியாளர் சந்திப்பின் போது ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜெலென்ஸ்கி, "ரஷ்யாவில் மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொல்ல விரும்புகிறது. இது புடினுக்கு இது மிகவும் ஆபத்தானது" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
Getty
பிரிகோஜின் குற்றச்சாட்டு
வாக்னர் குழுமத்தின் தலைவரான ப்ரிகோஜின், கிழக்கு உக்ரைனில் உள்ள பக்மத்தை கைப்பற்றும் போரில் பலத்த உயிர்ச்சேதங்கள் குறித்து பலமுறை புலம்பியுள்ளார்.
புட்டினுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டி, ஆட்சி கவிழ்ப்பு முயல்வதற்கு முன்னதாக, போதுமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்காமல் ரஷ்ய இராணுவம் ஏமாற்றியதாக பிரிகோஜின் குற்றம் சாட்டியாதும் குறிப்பிடத்தக்கது.Wagner Group, Wagner mercenary group, Volodymyr Zelenskyy, Vladimir Putin
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |