ஒரு புதிய நிலைக்கு கொண்டுசெல்ல தயாராக இருக்கிறோம்: முதல் முறையாக சவூதி சென்ற ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை ட்வீட் செய்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் சவூதி பயணம்
ரஷ்யாவுடனான போர் நீடித்து வரும் நிலையில், அரபு லீக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் Jeddahவில் வந்திறங்கியதாக சவூதி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சவூதி வந்த சிறிது நேரத்திலேயே ஜெலென்ஸ்கி ட்வீட் ஒன்று செய்தார்.
فيديو | وصول الرئيس الأوكراني فلاديمير زيلينسكي إلى المملكة لحضور #قمة_جدة العربية الـ 32#الإخبارية pic.twitter.com/rRWDeN8wuU
— قناة الإخبارية (@alekhbariyatv) May 19, 2023
புதிய நிலைக்கு தயார்
அதில், 'அரபு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் மற்றும் உக்ரைனின் உறவுகளை மேம்படுத்துவதற்காக சவூதி அரேபியாவிற்கு எனது முதல் பயணத்தை தொடங்குகிறேன்.
கிரிமியாவில் உள்ள அரசியல் கைதிகள் மற்றும் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள், திரும்பும் எங்கள் மக்கள், அமைதி பார்முலா மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக KSA ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது. எங்கள் ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்' என கூறியுள்ளார்.
Beginning my first-ever visit to the Kingdom of Saudi Arabia to enhance bilateral relations and Ukraine’s ties with the Arab world. Political prisoners in Crimea and temporarily occupied territories, the return of our people, Peace Formula, energy cooperation. KSA plays a…
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 19, 2023
கடந்த ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடுநிலை வகிக்க சவூதி முன்வந்துள்ளது.
SPA
SPA