போரை முடித்து கொள்ளலாம்! இதுக்கு தயாரா இருக்கேன்... ரஷ்யாவிடம் இறங்கிவந்த ஜெலன்ஸ்கி
போர் சண்டையை முடித்து கொள்ளலாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு நான் தயார் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி 2 மாதம் ஆகிவிட்டது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் அதை கண்டு கொள்ளாத ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
நேற்று கூட நாட்டின் ஒடேசா நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் பல தீப்பற்றி எரிந்து நாசமானது. இத்தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் சுமூக முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது.
இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மீண்டும் நேற்று தலைநகரில் நிருபர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
துவக்கம் முதலலே ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் கூறி வருகிறேன்.
போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் நான் அவரை சந்திக்க விரும்புகிறேன். மற்றபடி அவரை சந்திக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. ஏனென்றால் எங்களது நட்பு நாடுகள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
ஆனால் ரஷ்யா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மோசமான சூழலை சந்திக்கும் மக்களை எந்த வகையிலாவது காப்பாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். இதனால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.