உக்ரைனின் முதல் பெண்மணி எழுதிய கடிதத்தை ட்ரம்பிடம் வழங்கிய ஜெலென்ஸ்கி
உக்ரைனின் முதல் பெண்மணி எழுதிய கடிதத்தை ஜெலென்ஸ்கி ட்ரம்பிடம் வழங்கினார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட்-18) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, ஜெலென்ஸ்கி உக்ரைனின் முதல் பெண்மணியான ஒலேனா ஜெலென்ஸ்காவிடமிருந்து வந்த கடிதத்தை ட்ரம்பிடம் வழங்கினார்.
ஆனால், "இந்த கடிதம் உங்களுக்காக இல்லை, உங்கள் மனைவி மெலானியா ட்ரம்பிற்காக" என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
கடந்த வாரம், ட்ரம்ப் மெலானியாவின் கடிதத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கடித்ததில், குழந்தைகளின் சிரிப்பை பாதுகாக்கும் பொறுப்பை புடின் ஏற்கவேண்டும் என உருக்கமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
"இன்று சில குழந்தைகள் சிரிக்க முடியாமல் இருக்கின்றனர். அவர்களின் சிரிப்பை மீட்டெடுக்க உங்கள் ஒருவரால் முடியும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு சமாதான முயற்சியை மேற்கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி மற்றும் NATO செயலாளர் மார்க் ருட்டே ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு உக்ரைன்-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சமாதான முயற்சிகளுக்கு முக்கிய கட்டமாகவும் அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Zelensky Trump meeting 2025, Ukraine First Lady letter, Melania Trump Putin letter, Ukraine Russia peace talks, White House Zelensky visit, Trump Zelensky Oval Office