சீன தலைநகரை தாக்கிய 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை! வேதனை தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி
சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 பேர் உயிரிழப்பு
சீனாவில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 20 பேர் பலியாகினர், மேலும் 27 பேர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின.
Ng Han Guan / AP
டோக்சுரி எனும் புயல் தாக்கியதில் இந்த கனமழை ஏற்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தினால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பல சாலைகள் சேதமடைந்து, மரங்கள் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெய்ஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இதுகுறித்து தெரிவித்தனர்.
Reuters/China Daily
ஜெலென்ஸ்கி இரங்கல்
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனமழை பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எனது மற்றும் உக்ரைன் மக்கள் சார்பாக, சீன மக்கள் குடியரசின் தலைவர் மேதகு ஜி ஜின்பிங் அவர்களுக்கும், கடுமையான வெள்ளப் பேரழிவால் ஏற்பட்ட இழப்புகளுக்காக சீன மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும், சேதமடைந்த அனைத்து உள்கட்டமைப்புகளும் மீட்கவும் நான் விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
我谨代表我个人及乌克兰人民就特大洪涝灾害造成人员伤亡,向中华人民共和国主席习近平阁下和中国人民表示最诚挚的慰问及支持。祝愿各位受害者早日康复,所有受损基础设施早日恢复。
— Володимир Зеленський (@ZelenskyyUa) August 5, 2023
Handout/Anadolu Agency via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |