முழு ஐரோப்பாவின் சுதந்திரத்திற்காக உக்ரைன் போராடுகிறது - வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் தனக்காக மட்டும் அல்லாமல், முழு ஐரோப்பாவின் சுதந்திரத்திற்காகவும் போராடுவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போராடி வரும் உக்ரைன்
ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்த்து உக்ரைன் போராடி வரும் நிலையில், வடக்கு எல்லையை கடக்க முயன்ற ரஷ்ய குழுவின் சதிச்செயலை முறியடித்ததாக உள்விவகார அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தங்களின் போராட்டம் சுதந்திரத்திற்கானது என குறிப்பிட்டுள்ளார்.
president.gov.ua
ஜெலென்ஸ்கியின் பதிவு
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'அனைவருக்கும் பொதுவான சுதந்திரம் இருக்கும்போது, ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரம் வலிமையானது என்பதை ஐரோப்பாவின் நாடுகள் அறிந்திருக்கின்றன.
ஐரோப்பாவில் எந்த பருவங்கள் மற்றும் மனநிலைகள், அரசியல் போக்குகள் அல்லது தனிப்பட்ட லட்சியங்களைப் பொருட்படுத்தாமல், எங்கள் மதிப்புகளை எப்படி ஒருங்கிணைத்து பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால், இப்போது அரசியல் சில சமயங்களில் ஒற்றுமைக்கு மேலாக இருக்க முயல்கிறது. உணர்வுகள் தேசங்களின் அடிப்படை நலன்களுக்கு மேல் இருக்க முயல்கின்றன என்பதற்கான பல்வேறு சமிக்ஞைகளை நாம் காண்கிறோம்.
உக்ரைன் அதன் சுதந்திரம் மற்றும் முழு ஐரோப்பாவின் சுதந்திரத்திற்காகவும் போராடுகிறது. மேலும் உதவும் ஒவ்வொரு தேசத்திற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
president.gov.ua
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |