ரஷ்யா ஏற்படுத்திய பேரழிவு எங்களை நிறுத்தாது! அனைத்து நிலங்களையும் விடுவிப்போம்..ஜெலென்ஸ்கி சூளுரை
ககோவ்கா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு தங்களை நிறுத்தாது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
நீர்மின் நிலைய அணை அழிப்பு
தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள ககோவ்கா நீர்மின் நிலைய அணை அழிக்கப்பட்டதற்கு ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டினர்.
ஆனால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியோ இது ரஷ்யா பயங்கரவாதிகளின் சதி செயல் என பகிரங்கமாக கூறி வருகிறார்.
அணை உடைந்து வெள்ளம் வெளியேறும் வீடியோவை பகிர்ந்த அவர், உக்ரேனிய நிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என ஆவேசமாக பதிவிட்டார்.
Reuters
ஜெலென்ஸ்கி சூளுரை
இந்நிலையில், தங்களுடைய அனைத்து நிலங்களையும் விடுவிப்போம் என அவர் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'ரஷ்ய பயங்கரவாதிகளால் ககோவ்கா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு உக்ரைன் மற்றும் உக்ரேனியர்களை நிறுத்தாது. இன்னும் எங்களுடைய அனைத்து நிலங்களையும் விடுவிப்போம். ஒவ்வொரு ரஷ்ய பயங்கரவாத செயலும், ரஷ்யா தனது குற்றங்களுக்கு செலுத்தும் இழப்பீட்டுத் தொகையை மட்டுமே அதிகரிக்கிறது, ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நிலத்தில் தங்குவதற்கான வாய்ப்புகளை அல்ல' என கூறியுள்ளார்.
AFP via Getty Images
AFP via Getty Images