கரடிகள் போல் உடையணிந்த மனிதர்களை வைத்து ஏமாற்றுவதாக உயிரியல் பூங்கா ஒன்றின் மீது விமர்சனம்
சீனாவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், மனிதர்களுக்கு கரடிகள் போல் உடை அணிவித்து கரடி என ஏமாற்றுவதாக சமூக ஊடகங்களில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களைப் போல எழுந்து நிற்கும் கரடிகள்
சீனாவிலுள்ள Hangzhou உயிரியல் பூங்காவில், கரடிகள் மனிதர்களைப் போல இரண்டு கால்களில் நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.
ஆகவே, அவை உண்மையான கரடிகள் அல்ல, மனிதர்களுக்கு கரடிகள் போல் உடை அணிவித்து கரடி என அந்த உயிரியல் பூங்கா ஏமாற்றுகிறது என்று மக்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள், அவை மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட sun bears வகை கரடிகள். அவை அப்படித்தான் இரண்டு கால்களில் நிற்கும், பார்ப்பதற்கும் மற்ற கரடிகளைவிட உருவத்தில் சிறியவையாக இருக்கும் என கூறியுள்ளனர்.
ஏற்கனவே முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள்
இதற்கிடையில், சீனாவிலுள்ள வேறு சில உயிரியல் பூங்காக்களில், கழுதைகள் உடலில் வர்ணம் பூசி, அவற்றை வரிக்குதிரைகள் என்றும், நாய்களின் உடலிலுள்ள முடியை வெட்டி, வர்ணம் பூசி அவற்றை ஓநாய்கள் என்றும் ஏமாற்றிவருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
அந்த குற்றச்சாட்டுகளையும் அந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |