திடீரென இடிந்து விழுந்த பாலத்தின் சுவர்! 13 பேர் பலியான பரிதாபம்.. கதறும் குடும்பங்கள்
பாகிஸ்தானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த இரு சம்பவங்களில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
பாலத்தின் சுவர் இடிந்து விபத்து
தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கட்டுமானத்தில் இருந்த பாலத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
REUTERS/Waseem Khan
இதில் அங்கு கூடாரம் அமைத்து பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு பகுதியில், 11 வயது சிறுமி ஒருவரும் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இவ்வாறாக மொத்தம் 13 பேர் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
AP Photo/Rahmat Gul
கனமழையால் பலியான மக்கள்
இதற்கிடையில் கனமழை வெள்ளத்தினால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, சூன் மாதம் 25ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் பெய்த கனமழையில் இதுவரை 41 குழந்தைகள் உட்பட 99 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் அடுத்தடுத்த நோய்களால் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
AFP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |