இந்திய வம்சாவளியினர் 2 பேர் அமெரிக்காவில் கைது: பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டு
அமெரிக்காவில் தப்பியோடியவர்கள் குறித்த பொய் தகவலை வழங்கிய இந்திய வம்சாவளி ஹோட்டல் உரிமையாளர்கள் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியினர்
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இருவரின் இருப்பிடம் குறித்த பொய்யான தகவலை வழங்கிய அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 ஹோட்டல் உரிமையாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாண்டீகிளில்(Monteagle) உள்ள சூப்பர் 8 மவுண்டன் இன் என்ற ஹோட்டலின் உரிமையாளர்களான தக்ஷாபென் படேல்(Dakshaben Patel) மற்றும் ஹர்ஷில் படேல்(Harshil Patel) என்ற இரண்டு இந்திய வம்சாவளியினரை வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Monteagle Police Department
போதைப் பொருள் விற்பனை பரிமாற்றங்கள் அப்பகுதியில் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து ஹோட்டலின் பின்புறத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் தேடப்பட்டு வந்த இருவர் பால்கனியில் இருப்பதை பார்த்துள்ளனர்.
ஆனால் அவர்களின் இருப்பிடம் தொடர்பாக ஜூலை 18ம் திகதி நடந்த விசாரணையின் போது பொய்யான தகவலை ஹோட்டல் உரிமையாளர்கள் வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
Google Map
அத்துடன் பின்னர் ஹோட்டலின் ஒரு மூலையில் ரகசிய அறை இருப்பதையும், அதில் தேடப்பட்டு வந்த இருவரும் தங்கி இருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் பொலிஸாரிடம் பொய்யான தகவலை வழங்கிய குற்றத்திற்காக தக்ஷாபென் படேல் மற்றும் ஹர்ஷில் படேல் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளி ஹோட்டல் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |