2025-ல் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்: இலங்கை, இந்தியா பிடித்துள்ள இடம்
Numbeo Safety Index 2025 பட்டியலில், ஐரோப்பிய நாடான ஆண்டோரா (Andorra) உலகின் மிகவும் பாதுகாப்பான நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே உள்ள சிறிய நாட்டாகும். இதன் பாதுகாப்பு மதிப்பெண்: 84.7.
இந்த பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார் மற்றும் ஓமான் ஆகிய மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளும் முதல் 5 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
இலங்கை, இந்தியா பிடித்துள்ள இடங்கள்:
இலங்கை 59-வது இடத்தை (மதிப்பெண்: 57.9) பிடித்துள்ளது. இந்தியா, 147 நாடுகளில் 66வது இடத்தில் (மதிப்பெண்: 55.7) உள்ளது. இது அமெரிக்கா (89வது இடம், மதிப்பெண்: 50.8) மற்றும் பிரித்தானியா (87வது இடம், மதிப்பெண்: 51.7) ஆகியவற்றை விட மேலாகும்.
உலகின் Top 10 பாதுகாப்பான நாடுகள்:
- Andorra – 84.7
- UAE – 84.5
- Qatar – 84.2
- Taiwan – 82.9
- Oman – 81.7
- Isle of Man – 79.0
- Hong Kong – 78.5
- Armenia – 77.9
- Singapore – 77.4
- Japan – 77.1
உலகின் 10 பாதுகாப்பற்ற நாடுகள்:
Venezuela – 19.3
Papua New Guinea – 19.7
Haiti – 21.1
Afghanistan – 24.9
South Africa – 25.3
Honduras – 28.0
Trinidad and Tobago – 29.1
Syria – 31.9
Jamaica – 32.6
Peru – 32.9
Check Full List Here : Safety Index by Country 2025
Numbeo Index குறித்த விபரம்:
இந்த பட்டியல், பயனாளர்கள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. குற்றச்செயல் வீதம், பொது பாதுகாப்பு உணர்வு மற்றும் காவல் செயல்திறன் போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இந்தியா முன்னேற்றம் பெற்றிருப்பது, அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக கட்டுப்பாடுகள் மற்றும் சுற்றுலா உத்திகள் ஆகியவற்றின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Numbeo Safety Index 2025, Safest countries in the world, India vs US safety ranking, Andorra safest country 2025, Global safety index ranking, World's least safe countries 2025, India safety ranking vs UK, Numbeo safety score India, UAE Qatar safest nations, Afghanistan Syria safety rank