எகிப்தில் 5,000 வருட பழமையான மதுபான குடுவைகள் கண்டுபிடிப்பு
எகிப்தில் 5,000 வருட பழமையான மதுபான குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் அபிடோஸ் பகுதியில் உள்ள மெரெட்-நீத் என்ற ராணியின் சமாதியில் 5,000 வருடங்களுக்கு முன் பயன்படுத்தப்பட்ட, மெழுகால் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மதுபான குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த அதிசய கண்டுபிடிப்பை வியன்னா பல்கலைக்கழகத்தின் Christiana Köhler தலைமையிலான தொல்லியலாளர் குழு மேற்கொண்டுள்ளது.
மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட திராட்சை விதைகள், கைவினைப்பொருட்கள், காலடித் தடங்கள் பதிந்த களிமண் ஓடுகள் உள்ளிட்டவை, பழங்கால எகிப்தியர்களின் வாழ்க்கை முறையையும் தொழில்நுட்ப நெருக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இது போல முழுமையாக மூடியுள்ள மதுபான குடுவைகள் கிடைப்பது மிக அரிது.
இவற்றின் மூலம் பழங்கால மதுபான தயாரிப்பு, வணிக வலையமைப்புகள், மற்றும் சமூக மரபுகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
உள்ளே உள்ள திரவத்தை ஆய்வு செய்வதன் மூலம், அந்தக் காலத்து மதுபானம் எப்படி தயாரிக்கப்பட்டது, அதன் சுவைத் தன்மை, மற்றும் சேர்க்கைகள் குறித்து அறிய முடியும்.
எகிப்தின் முதல் அரசி
மேலும், மெரெட்-நீத் (Meret-Neith) என்பது எகிப்தின் முதல் அரசியாக (First Female Pharaoh) இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவரது சமாதி அருகில் 41 சாமியார் மற்றும் நெருங்கியவர்களின் சமாதிகள் இருப்பது, அக்கால அரசியல் அமைப்பும், அடக்கம் தொடர்பான மரபுகளும் எவ்வாறு இருந்தன என்பதையும் புரியச் செய்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ancient Egypt wine discovery, Queen Meret-Neith tomb, 5000 year old wine jars, Egyptian winemaking history, Female pharaoh Meret-Neith, Abydos tomb excavation, Ancient Egyptian rituals, Sealed wine jars archaeology, Grape seeds Egypt tomb, Early winemaking Mediterranean