உக்ரைனில் இருந்து 7,00,000 குழந்தைகள் நாடுகடத்தல்: ரஷ்யா அதிர்ச்சி தகவல்
போர் நடைபெற்ற உக்ரைனிய பகுதிகளில் இருந்து சுமார் 7,00,000 சிறுவர்களை ரஷ்யாவிற்கு மாற்றியதாக மாஸ்கோ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை உக்ரைனில் இருந்து சட்டவிரோதமாக ரஷ்யா தங்கள் நாட்டிற்கு கடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வந்தது.
ஜூலை 2022ம் ஆண்டு அமெரிக்கா தோராயமாக கணக்கிட்ட அளவின்படி 2,60,000 குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டு சட்டவிரோதமாக உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு கடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.
Reuters
அதே சமயம் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 19,492 குழந்தைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு இருப்பதாக உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
குழந்தைகள் இடமாற்றம் பெரும்பாலும் போரின் தொடக்க காலங்களில் ஏற்பட்ட வையாகும்.
7,00,000 குழந்தைகள்
இந்நிலையில் ரஷ்யாவின் நாடாளுமன்ற மேலவை கூட்டமைப்பு கவுன்சிலின் சர்வதேச குழுவின் தலைவர் கிரிகோரி கராசின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த தகவலில், போர் நடைபெற்ற பகுதிகளில் இருந்து சுமார் 7,00,000 குழந்தைகளை ரஷ்யாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Reuters
மேலும் இது தொடர்பாக அவர் டெலிகிராமில் பதிவிட்ட தகவலில், உக்ரைனில் குண்டு மற்றும் ஷெல் தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்து 700,000 குழந்தைகள் எங்களிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மோதல் பகுதியில் சிக்கி தவித்த குழந்தைகளை பாதுகாப்பதே ரஷ்யாவின் நோக்கம் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |