உக்ரைனில் பள்ளி சீரமைப்புக்கு சுவிட்சர்லாந்து ஒதுக்கியுள்ள பெரும் தொகை: பயனடையும் 15,000 மாணவர்கள்
உக்ரைனில் பள்ளிகளை சரி செய்வதற்கு 6 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியை சுவிட்சர்லாந்து அரசு ஒதுக்கியுள்ளது.
உக்ரைன் போர்
ரஷ்யாவின் போர் நடவடிக்கை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது, இதில் பொதுமக்கள், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் என லட்சக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படைகளை சேர்ந்த 21,000 பேரை உக்ரைன் ஆயுதப்படை கொன்றதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
#Switzerland has allocated more than $6 million to repair and rebuild about 30 schools in #Ukraine.
— NEXTA (@nexta_tv) July 3, 2023
This will allow 15,000 schoolchildren to begin their studies on September 1. pic.twitter.com/gBH7KV15xV
அத்துடன் ரஷ்யா மட்டுமே என்னை கொல்ல விரும்புகிறது, ஆனால் உலகமே ரஷ்ய ஜனாதிபதி புடினை கொல்ல விரும்புவது அவருக்கு மிகவும் ஆபத்தானது என ஸ்பானிய ஊடகங்களுடனான செய்தியாளர் சந்திப்பில் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த ஒட்டுமொத்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் நிற்கும் நிலையில், அவர்கள் போரில் ரஷ்யாவை எதிர்த்து போரிட தேவையான அனைத்து ஆயுத உதவி மற்றும் நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
Brendan Hoffman for The New York Times
உக்ரைன் பள்ளிகளை சீரமைக்க சுவிட்சர்லாந்து உதவி
அந்த வகையில், உக்ரைனில் உள்ள 30 பள்ளிகளின் மறுகட்டமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 6 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியை சுவிட்சர்லாந்து அரசு ஒதுக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்து ஒதுக்கியுள்ள இந்த நிதியுதவி மூலம் வரும் செப்டம்பர் 1ம் திகதி முதல் சுமார் 15,000 பள்ளி குழந்தைகள் தங்களது பள்ளி படிப்பை தொடர உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Brendan Hoffman for The New York Times