தங்க கழிப்பறை, கோடிகளில் புரளும் அந்த ஒரு மனிதர் யார் தெரியுமா?
78 பில்லியன் மதிப்பில் சொகுசு வீடு, தங்க கழிப்பறை மற்றும் 1.5 கோடியில் கைக்கடிகாரம் இவ்வாறு உலக செல்வந்தர்களை எல்லாம் மிஞ்சிய ஆடம்பரத்தில் திழைக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆடம்பரம்
உக்ரைன் உடனான போர் பதற்றம் எப்போது தொடங்கியதோ அப்போதில் இருந்து தினசரி செய்திகளில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பெயர் இல்லாமல் இருப்பது இல்லை.
அதிலும் தற்போது உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை புடின் முன்னெடுப்பது தொடர்பான அச்சுறுத்தல்கள் பெருகி வருவதால் ரஷ்யாவின் மீது உலக நாடுகளின் கவனிப்பு அதிகரித்துள்ளது.
Getty
இவ்வாறு உலக நாடுகளை பதற்றத்திலேயே வைத்து இருக்கும் புடின், மன்னருக்கு இணையான சொகுசு ஆடம்பர வாழ்க்கையை முன் நகர்த்தி வருகிறார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சொந்தமாக 20 ஆடம்பர சொகுசு பங்களாக்கள், 43 விமானங்கள், 15 ஹெலிகாப்டர்கள், 700 கார்கள் மற்றும் பலவகையான கைக்கடிகாரம் என மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை புடின் வாழ்ந்து வருகிறார்.
Composite: Guardian
78 பில்லியன் மதிப்பில் சொகுசு பங்களா
புடினின் சொத்துகளில் மிக முக்கியமானவற்றில் ஒன்றாக அவரது பங்களாக்கள் திகழ்கின்றன. அவற்றில் ஒன்றை சுமார் 78 பில்லியன் தொகைக்கு புடின் கட்டியெழுப்பி உள்ளார், அத்துடன் அதற்கு புடின் பங்களா என்றும் பெயரிட்டுள்ளார்.
சுமார் 74 ஹெக்டேர் பரப்பளவில் கொண்டுள்ள இந்த பங்களா-வை சுற்றி பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரண்மனை மட்டும் 17,700 சதுர மீட்டர் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது, இதிலிருந்து கருங்கடலின் அழகை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
YOUTUBE/ALEXEI NAVALNY
அத்துடன் இவற்றில் பசுமை வீடு, தேவாலயம், எரிவாயு அறை மற்றும் 80 மீட்டர் அளவிற்கு சுரங்கப்பாதை, நீச்சல் குளம், இசைக்கான அறை, ஸ்பா, திரையரங்கம், விருந்தினருக்கான பிரம்மாண்ட படுக்கை அறை, 4 கோடி மதிப்பிலான ஆடம்பர ஷோபா, 44 லட்சம் மதிப்பிலான மதுபான டேபிள் ஆகியவை உள்ளது.
தங்க கழிப்பறையுடன் கூடிய ஜெட் விமானம்
கடந்த 2012ம் ஆண்டு வெளியான ரஷ்ய ஜனாதிபதி புடின் சொத்து விவர பட்டியலின் அடிப்படையில் அவருக்கு சொந்தமாக சுமார் 42 தனியார் ஜெட் விமானங்கள் உள்ளது, அதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் அவருக்கு விருப்பமான புதிய கிளாசிக்கல் ரக விமானத்தில் பயணம் செய்வார்.
இதனை புடின் “பறக்கும் கிரெம்ளின்” என அழைக்கிறார், 3000 கோடி மதிப்புள்ள இந்த ஜெட் விமானத்தில் தங்க கழிப்பறை இருப்பதாக தி கார்டியன் நாளிதழ் தங்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Inside Putin's $716 million jet pic.twitter.com/eg3yomtLs4
— 961iceberg ?? (@961iceberg) June 18, 2021
அத்துடன் இந்த ஜெட் விமானம் சுமார் 600 கி.மீ வேகத்தில் பறக்க கூடியது, மேலும் இதில் உடற்பயிற்சி கூடம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
1.5 கோடியில் கைக்கடிகாரம்
ஏ. லாங்கே & சோஹ்னே 1815 அப்/டவுன் தயாரித்த சுமார் 1.5 கோடி மதிப்பு கொண்ட பிளாட்டினம் மற்றும் முதலை தோலால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் ரஷ்ய ஜனாதிபதி புடின் வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.