ஆசிய நாட்டில் எரிமலையில் ஏறும்போது விபரீதம்! 26 வயது பிரேசிலிய பெண் சடலமாக மீட்பு
இந்தோனேசியாவில் மலையேற்றத்தின்போது தவறிவிழுந்த பிரேசியலிய பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
Mount Rinjani எரிமலை
இந்தோனேசிய தீவான லோம்போக்கில் Mount Rinjani எரிமலை 12,000 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டது. மேலும் தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டத்தில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
பிரேசிலைச் சேர்ந்த ஜூலியானா மரின்ஸ் (26) என்ற இளம்பெண் இந்தோனேசியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தனது குழுவுடன் Mount Rinjani எரிமலையில் மலையேற்றம் மேற்கொண்டார்.
ஜூலியானா மலையேற்றத்தின்போது எதிர்பாராத விதமாக, பாறை முகப்பில் இருந்து சுமார் 490 அடி கீழே தவறி விழுந்தார்.
சுமார் 490 அடி கீழே
நான்கு நாட்களாக அவர் சிக்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று இறந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ட்ரோன் மூலம் ஜூலியானாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
பிரேசில் அரசாங்கம், "சாதகமற்ற வானிலை, நிலப்பரப்பு மற்றும் அப்பகுதியில் காணக்கூடிய சூழ்நிலைகள் காரணமாக நான்கு நாட்கள் உழைப்பிற்கு பிறகு, இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் குழுக்கள் பிரேசிலிய சுற்றுலாப் பயணியின் உடலைக் கண்டுபிடித்தன" என அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |