விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 பேர் பலி! மீட்பு பணி தீவிரம்
கம்போடியா நாட்டில் இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.
இரவு நேர விடுதி
கம்போடியா தலைநகர் Phnom Penhயில் அமைந்துள்ள இரவு நேர விடுதி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த ஆண்கள், பெண்கள் என 6 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
தீ விபத்திற்கான உடனடி காரணம் அறியப்படவில்லை. எனினும் பொலிஸார் இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அதிகாரிகள் சிலர் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
செய்தித் தொடர்பாளர்
காவல்துறை செய்தித் தொடர்பாளர் சான் சோக் சீஹா கூறுகையில், இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பது எங்களுக்கு தெரியாது.
அதிகாலை நடந்த இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தாய்லாந்து - கம்போடியா எல்லையில் உள்ள சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |