உக்ரைனுக்கு கூடுதலாக 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி: கனடா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
உக்ரைனுக்கான கூடுதல் இராணுவ உதவியை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
உக்ரைன் போர்
ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கையில் தற்போது உக்ரைன் தங்களது பதிலடி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இதற்காக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதோடு பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து புதிய ராணுவ உதவி தொகுப்பை பெற்று வந்தார்.
As part of a new aid package, Canada will transfer the confiscated Russian An-124 Ruslan aircraft to Ukraine. pic.twitter.com/RjZ8o0szRz
— NEXTA (@nexta_tv) June 10, 2023
இதையடுத்து ரஷ்யா உடனான எதிர்ப்பு தாக்குதலை உக்ரைன் தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருவதுடன் போர்க்கள முன்வரிசையில் உக்ரைனிய ஆயுதப்படை குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது.
புதிய இராணுவ உதவி தொகுப்பு
போர் நிலைமைகள் முன்வரிசையில் அதிகரித்து வரும் இந்த நிலையில், கனடா ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனிய தலைநகர் கீவ்-வுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, 400 மில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் ராணுவ உதவியை உக்ரைனுக்கு கனடா அரசு அறிவித்துள்ளது.
#Canada has announced a new military aid package for #Ukraine worth about $400 million https://t.co/Ky9jCSaUCc pic.twitter.com/fYnEa7R6dL
— NEXTA (@nexta_tv) June 10, 2023
அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகளையும் கனேடிய ஜனாதிபதி ட்ரூடோ அறிவித்துள்ளார், 24 ரஷ்யர்கள் மற்றும் 17 ரஷ்ய கம்பெனிகள் மீது இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய An-124 Ruslan விமானத்தை கனடா உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.