ஒரே ஆண்டில் 80 பேரிடர்கள்..! ஆசிய கண்டத்திற்கு செக் வைக்கும் பருவநிலை மாற்றம்:பகீர் அறிக்கை
ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டு மட்டும் 80 பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது என்று உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
மோசமடையும் ஆசிய நாடுகளின் பருவநிலை
பருவநிலை மாறுபாடுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டு வரும் நிலையில், உலக வானிலை அமைப்பு (world meteorological organization) ஆசியாவில் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஆசிய கண்டத்தில் தான் அதிவேகமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் ஆசியாவில் வானிலை, பருவநிலை மற்றும் தண்ணீர் தொடர்பான 81 பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அதில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 5 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
AFP
இதில் 83 சதவீத பாதிப்புகள் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் ஏற்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் 1961-1990 ஆண்டுகளில் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தை விட 1991 – 2022 ஆண்டுகளில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் 2 மடங்கு அதிகம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறட்சியால் அவதிப்படும் சீனா
சீனாவை பொறுத்தவரை நீண்ட கால வறட்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சீனாவில் தண்ணீர் மற்றும் மின்சார பற்றாக்குறை இருப்பதாகவும் உலக வானிலை அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆசியாவில் பல பகுதிகளில் வறட்சி காணப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக சீனாவில் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உருவான அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஆசியாவில் வழக்கத்தை விட வேகமாக பனிப்பாறைகள் உருகி வருகிறது என்றும் எச்சரித்துள்ளது.
பொருளாதார இழப்பு
கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மட்டும் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 2002 – 2021 காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை விட அதிகம் என்று உலக வானிலை அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |