டிரம்ப்பை சந்தித்தது உண்மையில் புடின் இல்லையா? புடினே கொடுத்த விளக்கம்
டிரம்ப்பை சந்தித்தது உண்மையில் புடின் இல்லை, அவரை போல் தோற்றம் கொண்ட நபர் என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
டிரம்ப் புடின் சந்திப்பு
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புடின், உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக ஆகஸ்ட் 15 ஆம் திகதி, அலஸ்காவில் சந்தித்து பேசினர்.
இரு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு உலகளவில் கவனம் பெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், புடினின் வீடியோக்களை பகிர்ந்து, பலரும் அலஸ்காவிற்கு சென்றது புடின் இல்லை, அவரை போல் தோற்றம் கொண்ட நபர் என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏன் சந்தேகம்?
இதற்கு ஆதாரமாக புடினின் கன்னம் மிகவும் பருமனாக உள்ளது. மேலும் அவர் வழக்கமாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். ஆனால் இந்த சந்திப்பின் போது அதிகமாக சிரித்தபடி இருந்தார்.
Its literally not even the real Putin. They didnt even send the good double, they sent "Jovial Putin", the expendable one that usually just makes minor public appearances and went to visit Kim in NK. Look at that hairline and those cheek fillers, jfc... pic.twitter.com/27lDBsbLqA
— Nostramanus 🐦⬛ (@fridolinmozart) August 15, 2025
மேலும், அவரது வழக்கமான KGB நடையை இந்த சந்திப்பில் பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
Has anyone noticed the movement of Putin's hands, when Putin walks one of his hands is always in alert position, that is not the real Putin, that is a copy of Putin and you can see a slight difference in his face as well. #Putin #Trump #Alaska pic.twitter.com/VlrDByLucp
— Utkarsh Chauhan (@utkarshc117) August 15, 2025
அதாவது, புடின் இதற்கு முன்னர் ரஷ்யா உளவுப்பிரிவான KGB யில் பணியாற்றி உள்ளார். அவர்கள் அவசர காலங்களில் துப்பாக்கியை விரைவாக எடுப்பதற்காக, தங்களது வலது கையை பக்கவாட்டில் வைத்திருக்க பயிற்சி பெற்றிருப்பார்கள்.
அதே போல், புடின் நடக்கும் போது தனது இடது கையை மட்டுமே அசைத்தபடி நடப்பார். அவரது வலது கை அசையாமல் இருக்கும்.
புடின் தன்னை போன்ற தோற்றம் கொண்ட நபர்களை அறுவை சிகிச்சை மூலம் உருவாக்கி அவர்களை அனுப்புவதாக பலமுறை சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனால், கிரெம்ளினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் அது வெறும் தகவல் புரளிகள் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டிலும் புடினே இதை மறுத்துள்ளார். ஒரு நபர் மட்டுமே என்னை போல் இருக்க முடியும். அது நானாகவே இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |