உக்ரைன் போரில் தொடர்பா? அமெரிக்காவின் கூற்றை அதிரடியாக மறுத்த நாடு
உக்ரைனில் இராணுவ மோதலில் தாங்கள் ஈடுபடவில்லை என கியூபா தெரிவித்துள்ளது.
குடிமக்களை பகடைக்காயாக
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், " ரஷ்யா - உக்ரைன் போரில் கியூபர்கள் ரஷ்ய துருப்புகளுடன் சேர்ந்து போராடுவதாக வந்த செய்திகள் எங்களுக்குத் தெரியும்.
தங்கள் குடிமக்களை பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்க கியூப ஆட்சி தவறிவிட்டது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, 2023 செப்டம்பர் முதல் கூலிப்படை நடவடிக்கைகளுக்காக 26 கியூபர்களுக்கு 5 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது உக்ரைனில் கியூபர்கள் போர்முனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், கியூபாவின் வெளியுறவு அமைச்சகம் வீரர்களை அனுப்பியதாகவோ தெரிவித்த அமெரிக்காவின் கூற்றை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "உக்ரைனில் இராணுவ மோதலில் கியூபாவின் தொடர்பு குறித்து அமெரிக்க அரசாங்கம் பரப்பி வரும் தவறான குற்றச்சாட்டுகளை கியூபா நிராகரிக்கிறது" என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |