சிறுமியின் விபரீத ஆசையால் நேர்ந்த துயரம்: இறுதிச்சடங்கில் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
மெக்சிகோவில் சிறுமி ஒருத்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை உயிரிழந்துவிட்டாள்.
இறுதிச்சடங்கில் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
பலோமா என்னும் அந்த சிறுமிக்கு (Paloma Nicole Arellano Escobedo, 14) இறுதிச்சடங்கு செய்யும்போதுதான் அவளது தந்தையான கார்லோஸுக்கு (Carlos Arellano) அதிர்ச்சியளிக்கவைக்கும் ஒரு உண்மை தெரியவந்தது.
ஆம், அந்த சிறுமிக்கு மார்பகங்களை பெரிதாக்குவதற்கான அழகியல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்துள்ளது.
சிறுபிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவளது உடலில் சிலிக்கான் பைகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவரவே அதிர்ந்துபோயுள்ளார் கர்லோஸ்.
தனக்கு தெரியப்படுத்தாமல் தன் பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பொலிசார் இந்த விடயத்தில் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கோரியுள்ளார் கார்லோஸ்.
விடயம் என்னவென்றால், பலோமா உயிரிழந்து சிறிது நேரத்தில் அவளது இறப்புச் சான்றிதழ் தயாராகிவிட்டதாம்.
பிள்ளை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சுவாசக்கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும் இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, தன் பிள்ளையின் மரணத்துக்கான காரணத்தை மருத்துவமனை மூடிமறைத்துவிட்டதாக கார்லோஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அதிகாரிகள் பலோமா மரணம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |