எகிப்து ஸ்கூபா படகில் தீ விபத்து: உயிரிழந்த பிரித்தானியர்களின் பெயர் விவரங்கள் வெளியீடு
எகிப்தில் ஸ்கூபா படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பிரித்தானியர்கள் இருவரின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்கூபா படகில் தீ விபத்து
ஞாயிற்றுக்கிழமை காலை எகிப்தின் மார்சா ஆலம் நகரில் உள்ள கடலில் மிதந்து கொண்டு இருந்த நடுத்தர அளவு கொண்ட ஸ்கூபா படகு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பிரித்தானியர்கள் 15 பேர் ஸ்கூபா படகில் ஒருவாரம் வரை தங்குவதற்கு பதிவு செய்து இருந்த நிலையில், என்சின் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக படகு முழுவதும் தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது.
Sky News
இதில் 12 பிரித்தானியர்கள் வரை அருகில் உள்ள படகில் ஏறி உயிர் தப்பிய நிலையில், 14 பேர் கொண்ட மீட்பு குழு போராடியும் மூன்று பிரித்தானியர்களை காப்பாற்ற முடியாமல் போனதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து ஏற்பட்ட காலை பிரித்தானியர்கள் ஸ்கூபா டைவ் செய்வதற்கு பதிலாக படகிலேயே தூங்க முடிவு செய்தனர் என இந்த பயணத்தை பதிவு செய்த ஸ்கூபா நிறுவனம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பிரித்தானியர்களின் பெயர் வெளியீடு
இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய பெண்மணி ஒருவரின் பெயர் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்த மேலும் இரண்டு பிரித்தானியர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
Sky News
ஸ்கூபா டிராவல் நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில், தொண்டு நிறுவன ஊழியர் கிறிஸ்டினா க்வின்(Christina Quinn) உடன் இணைந்து ஸ்டீபன் ஹில்(Stephen Hill ) மற்றும் பால் டார்லிங்(Paul Darling) என்ற இரண்டு பிரித்தானியர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
58 வயதான கிறிஸ்டினா க்வின், செயின்ட் லூக்ஸ் ஹாஸ்பிஸ், பிளைமவுத்தில் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நீண்ட காலமாக NHSல் பணிபுரிந்து வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.