யூடியூபின் முன்னாள் CEO மரணம்., நெருங்கிய தோழிக்காக சுந்தர் பிச்சை வேதனை
யூடியூப் (Youtube) நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி (Susan Wojcicki) காலமானார்.
இவருக்கு தற்போது 56 வயதாகிறது. சூசனின் மரணச் செய்தியை அவரது கணவர் Dennis Troper சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த சூசன் வோஜ்சிக்கி, கூகுள் வரலாற்றில் ஒரு முக்கிய நபராக இருந்தார் மற்றும் இணையத்தை வடிவமைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தார். அவர் 2014 முதல் 2023 வரை யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
சூசனின் மரணச் செய்தியை அறிந்த Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சூசனின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், "புற்றுநோயுடன் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த எனது அன்புத்தோழி @SusanWojcicki இழப்பால் நம்பமுடியாத வருத்தத்தில் இருக்கிறேன். அவள் யாரையும் போலல்லாமல் கூகிள் வரலாற்றின் முக்கிய மையமாக இருக்கிறாள், அவள் இல்லாத உலகத்தை கற்பனை செய்வது கடினம்.
அவர் ஒரு வியக்கத்தக்க நபர், தலைவர் மற்றும் நண்பர், அவர் உலகில் மிகப்பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினார், மேலும் அவரைப் பற்றி நன்கு அறிந்துகொண்ட சிறந்த எண்ணற்ற கூகிளர்களில் நானும் ஒருவன்.
நாங்கள் அவரை மிகவும் மிஸ் செய்வோம். அவரது குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் இருக்கும். RIP சூசன்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Former YouTube CEO Susan Wojcicki has died, Google CEO Sundar Pichai, Sundar Pichai sad