ஆஸ்திரியா நாட்டு மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்
ஆஸ்திரியா நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் தீ விபத்து
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் மோட்லிங் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மக்கள் வருகை அதிகமாக இருக்கும் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் பற்றிய தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியது.
Three people died in a fire at a hospital just south of #Austria’s capital, a spokeswoman says. pic.twitter.com/b4prnmYT5O
— Al-Estiklal English (@alestiklalen) May 30, 2023
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
3 பேர் உயிரிழப்பு
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினார்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 3 நோயாளிகள் வரை இந்த தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
Twitter/themalaysianinsight
அத்துடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.