ஆசிய நாடொன்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! 11 பேர் உயிரிழந்த சோகம்
இந்தோனேஷியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 11 பேர் பலியாகினர்.
வெள்ளப்பெருக்கு
இந்தோனேஷியா நாட்டில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்படுவதால், மக்கள் பலர் பாதிப்பிற்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
லட்சக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகள் அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு அருகிலேயே வசிப்பதால், அங்கு இதோபோன்ற பருவகாலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், வடக்கு மலுகு மாகாணம் டெர்னேட் தீவில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
11 பேர் பலி
இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. குறிப்பாக, ருவா எனும் கிராமத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும், அங்கு பிரதான சாலை மற்றும் கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கிராமத்தில் உள்ள பல வீடுகள், கட்டிடங்கள் சேற்றில் புதைந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |