மருத்துவமனையில் ஹமாஸ் பதுக்கிவைத்த டன் கணக்கிலான ஆயுதங்கள்., இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ
காஸா அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் டன் கணக்கில் ஆயுதங்களை பதுக்கிவைத்திருக்கும் விடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.
காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஹமாஸ் கட்டளை மையத்தை கட்டியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான நோயாளிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் ஃபிளாக் ஜாக்கெட்டுகளை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றிய வீடியோ ஒன்று வந்தது.
அல் ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேலியப் படைகள் சோதனை
காஸா அல் ஷிஃபா மருத்துவமனையில் வியாழக்கிழமையும் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து சோதனை நடத்தின. ஹமாஸ் பயங்கரவாதிகள் மருத்துவமனையில் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலிய டாங்கிகள் மருத்துவ வளாகத்திற்குள் இருந்ததாகவும், ராணுவ வீரர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகள், அவசர மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளுக்குள் நுழைந்ததாகவும் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆயுதங்கள் வீடியோ வெளியீடு
மருத்துவமனையில் ஹமாஸ் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை கண்டெடுக்கும் காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது. அல் ஷிஃபா மருத்துவமனையின் சுரங்கப்பாதையில் புல்டோசர்களைக் கொண்டு இஸ்ரேலிய வீரர்கள் தேடி வருகின்றனர்.
Watch as LTC (res.) Jonathan Conricus exposes the countless Hamas weapons IDF troops have uncovered in the Shifa Hospital's MRI building: pic.twitter.com/5qssP8z1XQ
— Israel Defense Forces (@IDF) November 15, 2023
"இன்றிரவு நாங்கள் ஷிஃபா மருத்துவமனையை குறிவைத்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறுகிறோம்,'' என்று காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் யாரோன் ஃபிங்கெல்மேன் இராணுவத்தின் டெலிகிராம் சேனலில் தெரிவித்தார்.
இஸ்ரேலிய மருத்துவமனையைச் சுற்றி புல்டோசர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படைகள் வளாகத்திற்குள் நுழைந்ததால் அனைத்து துறைகளுக்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை துண்டிக்கப்பட்டதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Israel finds Hamas weapons at Gaza hospital, Israel Defence Force