கிரீஸில் பயங்கர காட்டுத்தீ: தரையில் மோதி நொறுங்கிய விமானம்: 2 விமானிகள் உயிரிழப்பு
கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ
கிரீஸ் நாட்டில் உள்ள ரோட்ஸ் தீவில் வெப்ப அலைகள் காரணமாக காட்டுத்தீ உருவான நிலையில், தற்போது தீவு முழுவதுமாக காட்டுத்தீயால் சூழப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தீவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இருப்பினும் கிரீஸ் நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், வரும் நாட்களில் காட்டுத்தீ-க்கு வீடுகள் இரையாவதுடன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தீவில் இருந்து வெளியேற்றப்படும் கடுமையான நிலைமை வரலாம் என்று எச்சரித்துள்ளார்.
Both pilots on board the Canadair CL-215 that crashed in Karysto earlier today did not survive, Greek authorities have announced. https://t.co/gcHlX4Ur4B pic.twitter.com/yatEyW2pBn
— Breaking Aviation News & Videos (@aviationbrk) July 25, 2023
இதற்கிடையில் துருக்கி மற்றும் ஸ்லோவாக்கியா நாட்டு தீயணைப்பு படைகளுடன் சேர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கிரீஸ் நாட்டு ராணுவ வீரர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தரையில் விழுந்த ஹெலிகாப்டர்
இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விமானம் செவ்வாய்க்கிழமை ஏதென்ஸின் கிழக்கே எவியா தீவில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் விமானத்தின் முதன்மை விமானி மற்றும் துணை விமானி என இரண்டு பேரும் உயிரிழந்துவிட்டதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
Reuters
விபத்துக்கு முன்னதாக Canadair CL-215 விமானம் காட்டுத்தீயை அணைக்கும் பொருட்டு தண்ணீரை கொட்டும் காட்சிகளையும், பின் விமானம் மலைப்பகுதியில் மோதி தீப்பிடித்து எரியும் காட்சிகளையும் மாநில செய்தி ஒளிபரப்பாளரான ERT வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த விமானிகளில் ஒருவருக்கு 34 வயது என்றும் மற்றொருவருக்கு 27 வயது என்றும் தெரியவந்துள்ளது, இதுவே கிரீஸ் நாட்டு தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் பதிவான முதல் உயிரிழப்பு ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |