இந்தியா-மாலத்தீவு சர்ச்சை விவகாரம்: வைரலாகும் தோனி பேசிய வீடியோ
மாலத்தீவு விவகாரம் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-மாலத்தீவு விவகாரம்
சமீபத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Modi) அங்கிருந்த அழகிய கடற்கரை மற்றும் கடலுக்கடியில் நீந்தி சாகசம் செய்யும் புகைப்படத்தை X சமூக தளத்தில் வெளியிட்டார்.
மேலும் அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு(Lakshadweep) மனதை மயக்குவதாக உள்ளது என்றும், சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணத் திட்டத்தில் லட்சத்தீவை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
No one else would have done it better than our ever inspiring - transformational - transactional Leader as #Modi ji. #lakshadweepislands #lakshadweeptourism#Maldives Gaya tele lene@OfficeOfDGP @AskAnshul @mvmeet @ShefVaidya @mechirubhat @CTRavi_BJP @majorgauravarya pic.twitter.com/z0wElaQSDi
— Nagesha (@nageshr_r) January 5, 2024
இதையடுத்து மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை சுற்றுலாவுக்கு ஊக்குவிக்கும் விதமாக இந்திய பிரதமர் மோடி செயல் இருந்ததாக கருத்துகள் வெளியானது.
அதே சமயம் மாலத்தீவின் அமைச்சர்கள் சிலர் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும், இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும் மோசமான கருத்துக்களை வெளியிட்டனர்.
இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்ப்பு அதிகரித்ததோடு, மாலத்தீவை புறக்கணியுங்கள் என்ற ஹேஸ்டேக்கும் X தளத்தில் டிரெண்டாகியது.
தோனியின் பழைய வீடியோ வைரல்
இந்நிலையில் சுற்றுலா தலங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Few years ago, MS Dhoni: We want to explore Indian places first then outside India.#Maldives #MaldivesOut
— News hub (@newshubbindia) January 11, 2024
pic.twitter.com/HlSde7Ku4a
அதில், பயணம் செய்ய பிடித்த இடம் எது என்ற ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி, விளையாடுவதற்காக பல நாடுகளுக்கு செல்வது உண்டு, ஆனால் போட்டிகள் முடிவடைந்ததும் திரும்பி விடும் சூழல் மட்டுமே இருந்து வந்தது. இருப்பினும் என்னுடைய மனைவிக்கு பயணங்களில் அதிக விருப்பம் உண்டு,
தற்போது தான் நாங்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம், நம் நாட்டில் நிறைய அழகான இடங்கள் உள்ளன, அவற்றை முதலில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Maldives, Maldives Out, India, Modi, Boycott, Boycott Maldives, Lakshadweep,