மனைவியின் உடலை மறைத்த இந்திய வம்சாவளி கணவர்: அமெரிக்காவில் அரங்கேறியுள்ள மர்மம்
மனைவியை கொலை செய்து உடலை மறைத்த குற்றத்திற்கான இந்திய வம்சாவளி கணவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியை கொன்று உடலை மறைத்த கணவர்
அமெரிக்காவில் வசித்து வரும் 37 வயதான நரேஷ் பட்(Naresh Bhatt) என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த கணவர் தனது மனைவியின் உயிரற்ற உடலை மறைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மனைவி மம்தா கஃப்லே பட்(Mamta Kafle Bhatt) கொலை செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3 வாரங்களாக மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான 28 பெண்ணின் மரணம் தொடர்பாக கணவர் மீது கொலை குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாக சுமத்தப்படவில்லை என நீதிமன்ற ஆவணங்களை சுற்றி காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது.
கையும் களவுமாக சிக்கிய கணவர்
Manassas பகுதியில் உள்ள மருத்துவ மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்த மனைவி கஃப்லே பட் இறுதியாக ஜூலை 27ம் திகதி பார்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் கணவர் நரேஷ் பட் WUSAக்கு அளித்த நேர்காணலில், காணாமல் போன தன்னுடைய மனைவி குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாகவும், அவர் இது போல் காணாமல் போவது புதிதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் தீவிர விசாரணையில், இறுதியாக கணவர் நரேஷ் பட் ஜூலை 30 திகதி Walmart கடையில் 3 வித்தியாசமான கத்தியை வாங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
அத்துடன் இதற்கு அடுத்த நாள் Walmart கடையில் அவர் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை வாங்கியதையும் கண்டுபிடித்துள்ளனர்.
அதேசமயம் மூன்று கத்திகளில் இரண்டு கத்திகள் வீட்டில் சோதனை நடத்திய போது காணாமல் போனதையும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
ஆரம்ப கட்ட விசாரணையில் கணவர் மீது சந்தேகம் அதிகரிக்கவே அவர் ஆகஸ்ட் 22ம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |