சிறுவனின் தலையை அறுவை சிகிச்சையில் ஒட்டவைத்து இஸ்ரேல் மருத்துவர்கள் சாதனை: குவியும் பாராட்டு
இஸ்ரேலில் கார் விபத்தில் சிக்கிய சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் ஒட்டவைத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்
இஸ்ரேலில் சுலைமான் ஹாசன்(Suleiman Hassan) என்ற 12 வயது சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டு இருந்த போது கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சிறுவனின் தலை பகுதி அவனது கழுத்து முதுகு தண்டுவட பகுதியில் இருந்து தனியாக பிரிந்து விட்டது, இந்த நிலைக்கு இருதரப்பு அட்லாண்டோ ஆக்ஸிபிடல் மூட்டு இடப்பெயர்ச்சி (bilateral atlanto occipital joint dislocation) என அறிவியல் பூர்வமாக அழைக்கப்படுகிறது.
Hadassah Medical Center / HRAUN
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து சிறுவன் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஹடாசா மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு தீவிர அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்ட சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது சிறுவன் தலை பகுதி முழுவதும் கழுத்து முதுகு தண்டுவட பகுதியில் இருந்து விலகி இருந்தது.
ஆனால் மருத்துவர்களின் துல்லியமான மற்றும் வழக்கத்துக்கு மாறான அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் கழுத்து முதுகு தண்டுவட பகுதி அவரது தலை பகுதியுடன் இணைக்கப்பட்டது.
மருத்துவர்களுக்கு வாழ்த்து
இது தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்பார்வையிட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான Dr Ohad Einav, இந்த அறுவை சிகிச்சையில் சேதமடைந்த பகுதிகளை பொருத்துவதற்கு பல மணி நேரம் எடுத்ததாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார்.
@renmusp/Twitter
அத்துடன் சிறுவனை காப்பாற்றியதற்கு எங்களின் அறிவுக்கும், அறுவை சிகிச்சை அறையில் இருந்த அதி நவீன தொழில்நுட்பங்களுக்கும் தான் நன்றி கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 50 சதவீத வாய்ப்புகள் மட்டுமே இருந்த நிலையில், அவர் குணமடைந்து இருப்பது நிச்சயமாக அதிசயம் தான் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை கடந்த மாதத்தில் நடைபெற்ற நிலையில், மருத்துவ குழு இது தொடர்பான எந்தவொரு தகவலையும் ஜூலை மாதம் வரை வெளியிடவில்லை.
தற்போது சிறுவன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி சென்று விட்ட நிலையிலும் அவரது மருத்துவ நிலை குறித்து மருத்துவமனை தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |