ஜப்பானில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நிலநடுக்கம்
ஜப்பானில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது.
ஒரு நாள் கழித்து வெள்ளிக்கிழமை மாலை, டோக்கியோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றாலும், கனகாவா, சைட்டாமா, யமனாஷி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அவசர எச்சரிக்கையை அரசாங்கம் விடுத்துள்ளது.
எச்சரிக்கையை அடுத்து டோக்கியோவில் பல கட்டிடங்கள் குலுங்கின. டோக்கியோ மெட்ரோ நிறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரண்டு நிலநடுக்கங்களும் 7.1 மற்றும் 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. ஜப்பான் அதிகாரிகள் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.
ஜப்பான் கடற்கரையில் 50 செ.மீ சுனாமி தாக்கியது. தெற்கு மியாசாகி மாகாணத்தில் உள்ள மியாசாகி துறைமுகத்தை சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்படியானால், வரும் நாட்களில் மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |