1000 ரூபாய் பணத்தாளில் மெஸ்ஸியின் முகம்! அர்ஜென்டினா உண்மையிலேயே அச்சிடவுள்ளதா? வைரலாகும் படம்
FIFA உலகக்கோப்பை 2022-ஐ வென்றதன் நினைவாக அர்ஜென்டினா அதன் பணத்தாள்களில் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FIFA உலகக் கோப்பை 2022
பிரான்ஸை தோற்கடித்து அர்ஜென்டினா FIFA உலகக் கோப்பை 2022 வென்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது.
1986-ஆம் ஆண்டுக்கு பின், லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா 36 ஆண்டுகள் கடந்து 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்றது. இதனால், சமூக வலைதளங்களில் லியோனல் மெஸ்ஸி பற்றிய விவாதம் இன்னும் தொடர்கிறது.
இந்நிலையில், அர்ஜென்டினாவின் 1000 ரூபாய் நோட்டில் (1000 Peso Banknote) லியோனல் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிட அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
1000 ரூபாய் தாளில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிட அர்ஜென்டினாவின் மத்திய வங்கி அரசுக்கு முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் பாரவிவருகிறது.
ஆனால் அர்ஜென்டினா குடியரசு மத்திய வங்கி (BCRA) உண்மையில் அர்ஜென்டினாவின் பணத்தாள்களில் லியோனல் மெஸ்ஸியின் முகத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதா?
இந்த கேள்விக்கு பதில் - இல்லை.
Getty Images
உண்மை என்ன?
36 ஆண்டுகளுக்குப் பிறகு FIFA உலகக் கோப்பை 2022-ன் வெற்றியை மறக்கமுடியாததாக மாற்ற அர்ஜென்டினா விரும்புகிறது, இதன் காரணமாக BCRA கூட்டமும் நடந்துள்ளது.
அர்ஜென்டினா ஊடக அறிக்கைகளின்படி, BCRA குழு 'கேலியாக' 1000 பெசோ நோட்டில் லியோனல் மெஸ்ஸியின் முகத்தை வைப்பது பற்றி விவாதித்தது.
இந்த செய்தி வெளியாகி இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்த, 1000-பெசோ பில்லில் மெஸ்ஸியின் முகம் இருப்பது போன்ற படம் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வைரலானது.
1978-ல் நாணயம் வெளியிடப்பட்டது
அர்ஜென்டினா தனது முதல் உலகக் கோப்பை வெற்றியின் போது 1978-ல் ஒரு நாணயத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பைப் பார்க்கும்போது, கத்தார் உலகக் கோப்பையின் வெற்றியை மறக்கமுடியாததாக மாற்ற அரசாங்கமும் விரும்புகிறது, ஆனால் 1000 பெசோ நோட்டில் லியோனல் மெஸ்ஸியின் படம் நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது.
Argentina are thinking of putting Lionel Messi face on the bank notes ?? pic.twitter.com/sxKT66Aq4B
— Frank Khalid (@FrankKhalidUK) December 21, 2022