கடலின் எவ்வளவு ஆழத்தில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது தெரியுமா? ஸ்தம்பிக்க வைக்கும் தகவல்
டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் மாயமான நிலையில், கிராண்ட் கேன்யனை விட இரண்டு மடங்கு ஆழத்தில் அது தொலைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புறப்பட்ட 45 நிமிடங்களில்
ஞாயிறன்று ஐந்து பயணிகளுடன் புறப்பட்ட 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் குறித்த தகவலை வெளியிட, அந்த நிறுவனம் 8 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
@reuters
குறித்த கப்பலில் பாகிஸ்தானின் மிகப்பெரிய செல்வந்தரான Shahzada Dawood மற்றும் அவரது மகனும், கோடீஸ்வரர்களான Hamish Harding, Stockton Rush மற்றும் Paul-Henry Nargeolet ஆகிய ஐவருமே அந்த பயணிகள்.
இந்த நிலையில், அடுத்த 50 மணி நேரத்திற்குள் அந்த நீர்மூழ்கிக் கப்பலை மீட்கத் தவறினால், சிக்கலில் முடியும் என நிபுணர்கள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலின் எவ்வளவு ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகி, பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
195,000 பவுண்டுகள் கட்டணத்தில்
OceanGate நிறுவனத்திற்கு சொந்தமான அந்த நீர்மூழ்கிக் கப்பலானது கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தின் கடற்பகுதியில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் 195,000 பவுண்டுகள் கட்டணத்தில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
@reuters
இந்த நிலையில், ஞாயிறன்று கனடா நேரப்படி விடிகாலை 2.30 மணியளவில் புறப்பட்ட அந்த கப்பலானது 45 நிமிடங்களில் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளது.
அந்த கப்பல் தற்போது கடலின் அடித்தட்டில் காணப்படலாம் என்றே நிபுணர்கள் தரப்பு நம்புகிறது. அதாவது 12,500 அடி ஆழத்தில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியிருக்கலாம் என கூறுகின்றனர்.
12,500 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம்
அமெரிக்காவில் இருக்கும் Statue of Liberty கட்டிடத்தின் உயரம் என்பது 305 அடி தான். Empire State Building கட்டிடம் 1,250 அடி உயரம். மேலும், Grand Canyon எனப்படும் சிவப்பு பாறைகளின் உயரம் 6,000 அடி என கூறப்படும் நிலையில், மாயமாகியுள்ள OceanGate நீர்மூழ்கிக் கப்பலானது 12,500 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
@reuters
பொதுவாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலானது அதிகபட்சம் 1,476 அடி ஆழம் வரையில் மட்டுமே பயணம் செய்யும். ஆனால் OceanGate நீர்மூழ்கிக் கப்பலானது 13,123 அடி ஆழம் வரையில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும் 2,000 அடி வரை மட்டுமே பயணிக்க முடியும் என கூறுகின்றனர்.
அத்துடன் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் மட்டுமே அவர்களை மீட்பதற்கான ஒரே மாற்று எனவும், அப்படியான வாகனங்கள் 20,000 அடி வரை செல்லக் கூடியது எனவும் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |