வாயை மூடி மவுனம் காக்கும் மோடி.. எரியும் ஜனநாயகம்: விமர்சித்த பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ்
பிரதமர் நரேந்திர மோடி வாயை மூடி மவுனம் காப்பது போன்றும், கீழே ஜனநாயகம் எரிவது போன்றும் பிரிட்டிஷ் ஹெரால்டு இதழின் அட்டை படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டும் பிரதமர் நரேந்திர மோடி வாயை மூடி இருக்கும் அட்டைப்படத்துடன் இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான பிரிட்டிஷ் ஹெரால்டு கட்டுரை வெளியிட்டு உள்ளது.
பிரிட்டிஷ் ஹெரால்டு கட்டுரை
பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் வெளியிட்ட அட்டை படத்தில் மகாத்மா காந்தியின், ஒரு தேசத்தின் மகத்துவம் அதன் பலவீனமான மக்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது என்ற மேற்கோளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் நிலை குறித்த கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருதல் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான இறுக்கமான கட்டுப்பாடுகள் ஆகியவை ஜனநாயக விழுமியங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன.
மவுனம் காக்கும் மோடி
ஜனநாயகத்திற்கு சவாலாக இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக மோடி இருந்த போதிலும், ஊடகங்களுடன் மோடி ஈடுபடுவது அரிது. சில நேரங்களில் மட்டும் எங்காவது ஊடகங்களை சந்திப்பார்.
India Today
அமெரிக்க பயணத்தின் போது மட்டும் தான் அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்தித்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தது அப்போது தான். இதற்கு முன் 2015 ஆண்டு லண்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரத்தில் 249 தேவாலயங்கள் மற்றும் 17 கோயில்கள் அழிக்கப்பட்டன. 115 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40,000 பேர் இடம்பெயர்ந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மணிப்பூர் கலவரத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. மணிப்பூரை ஆளும் பாஜக அரசு பிரித்து ஆளும் கொள்கையை கடைபிடித்து வருகிறது. 2022 ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது பிரதமர் மோடி மவுனமாய் இருந்தது போல மணிப்பூர் கலவரத்தில் அமைதியாய் இருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் மணிப்பூர் கலவரத்திற்கு பின்னால் விஸ்வ இந்து பரிஷத்தின் பங்கு இருப்பதாக சுட்டுக் காட்டியுள்ளது.
மல்யுத்த வீரர்களின் போராட்டம்
மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாகவும் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது என இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவிற்காக பதக்கம் வாங்கிய வீரர்கள் வீதியில் இறங்கி போராடும் போது கூட இந்திய அரசு மவுனம் காக்கிறது.
இந்தியாவிற்கான பதக்கத்தை கங்கை நதியின் வீசுவோம் என்று கூறிய போது தான் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டார் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
பத்திரிகை சுதந்திரம்
2014 ஆம் ஆண்டு 140 ஆக இருந்த பத்திரிக்கை சுதந்திரம் மோடி ஆட்சியில் 161 ஆக சரிந்துள்ளது. உலகில், இந்தியாவில் தான் அதிக இணையத்தடைகள் உள்ளதாகவும் இந்த கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.
இங்கிலாந்தின் முன்னணி பத்திரிக்கையான பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ், 2019 ஆம் ஆண்டு நரேந்திர மோடியை உலகின் சக்திவாய்ந்த நபர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |