ரஷ்யாவின் போரை நிறுத்த இந்தியா அனைத்தையும் செய்யும்: ஜெலென்ஸ்கியிடம் உறுதியளித்த மோடி
உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்த இந்திய தன்னால் முடிந்த அனைத்தையம் செய்யும் என, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
மோடியை சந்தித்த ஜெலென்ஸ்கி
ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் தனது சமூக வலைதள பக்கத்தில், தங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை ஆதரித்ததற்காகவும், மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.
உறுதியளித்த இந்திய பிரதமர்
இந்த நிலையில், ரஷ்யாவின் போரை நிறுத்த எல்லாவற்றையும் செய்வோம் என ஜெலென்ஸ்கியிடம் இந்திய பிரதமர் மோடி உறுதி அளித்ததாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் பொருளாதாரம் அல்லது அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, மனித குலத்தின் பிரச்சனை என்று குறிப்பிட்ட மோடி, உங்களின் வலி மற்றும் நாட்டு மக்களின் வலி எனக்கு நன்றாக பிரிகிறது என ஜெலென்ஸ்கியிடம் கூறியுள்ளார்.
AFP
மேலும் இந்தியாவும், நானும் தனிப்பட்ட முறையில் அதன் தீர்வுக்காக எல்லாவற்றையும் செய்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி பத்து மடங்கு உயர்ந்து, இந்தியாவின் வருடாந்திர கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை எட்டியது என பிபிசி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.