எச்சரிக்கையை மீறி பதிலடியாக செயற்கைக்கோளை ஏவும் வட கொரியா! ஜப்பான் கடும் கண்டனம்
ஜப்பானிடம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
உளவு செயற்கைக்கோள்
உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா ஏவுகணை சோதனை, போர் ஒத்திகை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடகொரியா இரண்டு முறை உளவு செயற்கைக்கோள்களை ஏவ முயற்சித்தது, ஆனால் அவை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் தான் சமீபத்திய நாட்களில் வட கொரியா மீண்டும் செயற்கைக்கோளை ஏவ முயற்சிக்க தோன்றியதாக தென் கொரிய அதிகாரிகள் கூறினர்.
Reuters
அதன்படியே, டிசம்பர் முதல் வாரத்தில் வட கொரியா தனது சொந்த உளவு செயற்கைக்கோளை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதனை ஏவும் பணி அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் நடக்கும் என ஜப்பானுக்கு முறைப்படி அறிவித்துள்ளது.
வட கொரியாவை கண்காணிக்கும் வகையில் தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வரும் 30ஆம் திகதி செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலடியாக தென் கொரியாவை கண்காணிப்பில் வைத்திருக்க தனது செயற்கைக்கோளை வடகொரியா செலுத்த திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா அரசுகள் மஞ்சள், கிழக்கு சீனக் கடலில் உள்ள தங்கள் நாட்டு கப்பல்களுக்கு கடல்சார் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜப்பான் பிரதமர் கண்டனம்
இந்த நிலையில் வடகொரியாவின் இந்த திட்டத்திற்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர், 'செயற்கைக்கோளை ஏவுவதே நோக்கமாக இருந்தாலும், பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் தொடர் மீறலாகும்' என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தென் கொரிய இராணுவமானது ''வடகொரியா ஒரு செயற்கைக்கோளை ஏவுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் கைவிட வேண்டும். இது தென்கொரியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஆத்திரமூட்டும் செயல்'' என்று எச்சரித்தது.
ED JONES/AFP/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |