ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது - ரஷ்ய ஜனாதிபதி புடின் இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்
ஒடிசா மாநிலத்தில் இன்று நடந்த பயங்கர ரயில் விபத்து சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாலசோர் மாவட்டத்தில் இன்று பெங்களூரு, சென்னை ரயில்கள் உட்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் 35 பேர் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
விளாடிமிர் புடின் இரங்கல்
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில், இந்தியா, ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.