பாகிஸ்தான் எர்லைன் விமானம் மலேசியாவில் பறிமுதல் : பயணிகள் கடும் அவதி
குத்தகைதாரரின் கட்டண தொகையை செலுத்த தவறியதை அடுத்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட விமானம்
குத்தகை நிறுவனத்தின் கட்டண தொகையை செலுத்த தவறியதை அடுத்து போயிங் கோ. 777 என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் மே 29ம் திகதி கோலாலம்பூரில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குத்தகைதாரரின் வேண்டுகோளை தொடர்ந்து விமானத்தை பறிமுதல் செய்ய மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, என்று பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ஜெட் விமானத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் கான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
JUST IN: Malaysia has again seized Pakistan International Airlines (PIA) Boeing 777 aircraft at Kuala Lumpur airport over unpaid dues of $4 million; PIA approaches malaysian court pic.twitter.com/3x5CY4kuvA
— Megh Updates ?™ (@MeghUpdates) May 30, 2023
அத்துடன் விமானத்தை விடுவிப்பதற்கான முறையான வழிகளை அரசு ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அப்துல்லா ஹபீஸ் கான் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் அவதி
மலேசியாவில் விமானம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.
அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் மாற்று விமானத்தை அனுப்ப கோரியும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
Image Credit: Courtesy: Mohammed Firaas
கடந்த 2020ல் போலி விமானி உரிமங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் விமான சேவைகளுக்கு தடை விதித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான சேவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.