பாகிஸ்தான் பயங்கர குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கர குண்டுவெடிப்பு
வடமேற்கு பாகிஸ்தானின் பஜூர் நகரில் கட்சி மாநாடு ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் 44 பேர் பலியானதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
AP
பலி எண்ணிக்கை உயர்வு
இந்நிலையில் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் மூத்த அதிகாரி ஷவுகத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
AP
இதற்கிடையில், பலியானவர்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் அல்வி, முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |