பேரணியில் பயங்கர குண்டுவெடிப்பு! 40 உயிர்கள் பலி..150 பேர் காயம்
பாகிஸ்தானில் பேரணியின்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 40 பேர் பலியானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியிருக்கும் பாகிஸ்தான் மாவட்டம் பஜூரின் தலைநகர் Khar புறநகரில், மதகுரு மற்றும் அரசியல் தலைவரின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் திடீரென பயங்கர குண்டு வெடித்தது.
40 பேர் பலி
இதில் 40 பேர் பலியாகினர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆரம்பத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியது. ஆனால், பின்னர் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
ASSOCIATED PRESS
மனித வெடிகுண்டு என அச்சம்
இந்நிலையில் காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மனித வெடிகுண்டு மூலம் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ASSOCIATED PRESS
ASSOCIATED PRESS
PTI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |