உறவில் ஈடுபட அதிகளவு மாத்திரை! பெண் அதிகாரியுடன் இருந்தபோது டிஐஜிக்கு நேர்ந்த துயரம்
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரைகளை உட்கொண்ட பொலிஸ் டிஐஜி மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
லாகூர் பொலிஸ் டிஐஜி
பாகிஸ்தானின் லாகூர் மாகாண பொலிஸ் டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ஷெரிக் ஜமால். இவருக்கும் பெண் தேர்தல் ஆணைய அதிகாரியுடன் ஜமாலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஷெரிக் ஜமால், குறித்த பெண் அதிகாரியுடன் தனிமையில் இருந்துள்ளார்.
திடீர் மாரடைப்பு
அப்போது ஜமாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பதறிப்போன பெண் அதிகாரி உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட டிஐஜி
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் டிஐஜி ஜமால் பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டுள்ளார், இதனாலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளார்.
மேலும் பெண் தேர்தல் அதிகாரியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜமாலின் அடுக்குமாடி குடியிருப்பில் தடை செய்யப்பட்ட பாலியல் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
உயிரிழந்த ஷெரிக் ஜமாலுக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ள நிலையில் அவர்களை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
iStock Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |