அந்தரங்க ஆடியோ கிளிப் சர்ச்சை: சிக்கலில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெண் ஒருவருடன் அந்தரங்கமாக பேசியதாக கூறப்படும் ஆடியோ கிளிப் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆடியோ கிளிப்
பாகிஸ்தானில் சில மாதங்களில் பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பத்திரிக்கையாளர் சையத் அலி ஹைதர் யூடியூப்பில் பகிர்ந்த ஆடியோ கிளிப் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெண் ஒருவரிடம் அந்தரங்கமாக பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோ கிளிப்பில், ஆண் ஒருவர் (இம்ரான் கான் என கருதப்படும்) பெண் ஒருவரை சந்திப்பதற்கு வற்புறுத்துகிறார், ஆனால் அதற்கு அந்த பெண் தயக்கம் காட்டுகிறார். அதை தொடர்ந்து மோசமான கருத்துகள் கேட்கிறது.
ஆடியோ கிளிப்பில் உள்ள குரல் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் குரல் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இருப்பினும் இம்ரான் கானை இணையத்தில் வாட்டி வருகின்றனர்.
“அந்தரங்க அழைப்பு கசிந்ததாகக் கூறப்படும் வழக்கில், இம்ரான் கான் இம்ரான் ஹாஷ்மியாக(Emraan Hashmi) மாறிவிட்டார்" என்று பத்திரிக்கையாளரும் தெற்காசிய நிருபருமான நைலா இனாயத் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
In the alleged sex call leak, Imran Khan has become Emraan Hashmi.
— Naila Inayat (@nailainayat) December 19, 2022
ஆடியோ கிளிப் போலியானது
சர்ச்சை ஆடியோ கிளிப் வெளியானதை தொடர்ந்து இம்ரான் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ), போலியான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை கொண்டு தங்கள் தலைவரை குறிவைக்க அரசாங்கம் இதனை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரது அரசியல் எதிரிகளால் போலியான ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதை தாண்டி யோசிக்க முடியாது என்று பிடிஐ தலைவர் அர்ஸ்லான் காலிட் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.